உள்ளூர் செய்திகள்

ரேசன் கடை பொருட்களை புறக்கணித்து போராட்டம்

Published On 2023-05-14 13:24 IST   |   Update On 2023-05-14 13:24:00 IST
  • அதிகாரிகள் பேச்சுவார்த்தை
  • பொருட்கள் தகுந்த நேரத்தில் வழங்கப்படும் என உறுதி

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் ரேசன் கடை உள்ளது.

இந்த கடையை சரியான நேரத்துக்கு திறக்கப்படுவ தில்லை எனவும் கடை திறந்து இருந்தால் கூட பொருட்களை சரிவர வழங்குவதில்லை என கூறி அப்பகுதி மக்கள் ரேஷன் கடை பொருட்கள் வாங்குவதை புறக்கணித்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் பொருட்களை தகுந்த நேரத்தில் வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News