உள்ளூர் செய்திகள்
- நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானார் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
கந்திலி ஒன்றியம் செவ்வத்தூர் புதூர் பகுதியில் 2 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி செவ்வத்தூர் புதூர் ஏரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலரும், மந்திய கந்திலி ஒன்றிய செயலாளர் கே.ஏ. குணசேகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் துரை முன்னிலை வகித்தார்.
ஏரியில் பனை மரம் விதைகள் நடும் பணியை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி, ஒன்றிய குழு துணை தலைவர் மோகன் குமார் திருமுருகன் ஒன்றிய செயலாளர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் மோகனா, பாலு, மோகன் குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.