உள்ளூர் செய்திகள்

நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2022-11-04 15:23 IST   |   Update On 2022-11-04 15:23:00 IST
  • மருத்துவ வசதி வேண்டி நிர்வாகத்தினர் வலியுறுத்தல்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூங்குளம் ஊராட்சியில் பள்ளத்தூர் மலையடிவாரப்பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் பொது மக்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை என்றும் உடனடியாக தங்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி தினகரன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ருக்மணி மகேந்திரன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ச.பசுபதியை தொடர்பு கொண்டு மருத்துவ வசதி வேண்டி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர்.

உடனடியாக கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட இடத்தில் நடமாடும் மருத்துவக் குழு டாக்டர். பிரசாந்த் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போது சுகாதாரத் துறையினர், கிராம மக்கள், ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News