உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை

Published On 2023-07-08 08:55 GMT   |   Update On 2023-07-08 08:55 GMT
  • அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும்
  • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு

திருப்பத்தூர்:

திதிருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவ ராக இருந்த மதன் குமார் தஞ்சாவூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் காஞ்சீபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) முனி சுப்ராயன், பதவி உயர்வில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

அவர் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார். அவருக்கு அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர் முனி சுப்ராயன் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத் தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தேவை யான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

காலியாக உள்ள ஆசிரிய பணியிடங்களை நிரப்புதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும்.

திருப்பத்தூர் மாவட் டத்தை கல்வியில் முதன்ை மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News