உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை பொன்னியம்மன் சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

அரச, வேப்ப மரங்களுக்கு திருமணம்

Published On 2023-04-19 15:28 IST   |   Update On 2023-04-19 15:28:00 IST
  • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
  • பொதுமக்களுக்கு அன்னதானம்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் கிராமம் லாலா பேட்டையில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் உள்ள பொன்னியம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி சரவணன், பி.குமார் ஏ.பிரபு, ஜி.பிரகாசம், பொன்னியம்மன் கோயில் பூசாரி கவுரவம் தலைமையில் நடைபெற்றது.

ஊர் பொதுமக்கள் சார்பில் சீர்வரிசை மேல தாளங்களுடன் பொன்னியம்மன் கோவி லுக்கு எடுத்துவரப்பட்டு சாமி அலங்கரிக்கப்பட்டு பின்னர் சாமி பின்புறம் உள்ள வேப்ப மரத்திற்கும் அரச மரத்திற்கும் மஞ்சள் குங்குமம் மூலம் மரத்தில் அம்மன் சாமி வரையப்பட்டு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், யாக வேள்வி, தம்பதியர் சங்கல்பம், நடைபெற்றது.

தொடர்ந்து பலவித மூலிகையால் யாகம் குண்டம் வளர்க்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் பூசாரி தாலி கட்டி பொதுமக்கள் சாமியிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.

நிகழ்ச்சியில் மிட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவாஜி பிரபாகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தன.

Tags:    

Similar News