உள்ளூர் செய்திகள்

ஆல்பர்ட் ஜான்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளசாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும்

Published On 2023-05-25 13:41 IST   |   Update On 2023-05-25 13:41:00 IST
  • புதிய போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பேட்டி
  • பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பாலகிருஷ்ணன் சென்னை ஆவடிக்கு மாற்றப்பட்டார். திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஆல்பர்ட் ஜான் என்பவரை நியமித்து அரசு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பே ற்றுக்கொண்டார்.

அப்போது போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கூறியதாவது:- திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும். இதற்காக 15 தனிப்படைகள் அமைத்து மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. சட்டம், ஒழுங்கு மற்றும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் கடந்த 20 நாட்களாக நடத்தப்பட்ட சாராய வேட்டையில் பலர் கைது செய்யபட்டுள்ளனர்.

20 ஆயிரம் லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது. இச்சோதனை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும். திருப்பத்தூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்டம் அமைந்துள்ளது.

இதனால் சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கும். சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் தொடர்பான தகவல்களை 91599599919 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அவர்களின் ரகசியம் பாதுகாக்பப்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட போலீசாரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News