உள்ளூர் செய்திகள்

நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு

Published On 2023-01-12 10:07 GMT   |   Update On 2023-01-12 10:07 GMT
  • பள்ளி மேலாண்மை குழுவினர் புகார்
  • நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி

வாணியம்பாடி:

வாணியம்பாடி நேத்தாஜிநகர் வடக்கு பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு சொந்தமாக உள்ள இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து அங்கு வீடுகள் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தடுத்து மீண்டும் அந்த இடத்தை பள்ளிக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று வாணியம்பாடிக்கு வந்த கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம், நகரமன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

புகாரை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

Similar News