உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-06-13 10:17 GMT   |   Update On 2023-06-13 10:17 GMT
  • சட்டம் 2006 பிரிவு (31) கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது
  • பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) செந்தில்குமார் அறிவுறுத்த லின்படி ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஜோலார்பேட்டையில் உள்ள புது ஓட்டல் தெரு பகுதியில் ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட், மளிகை கடைகள், டீக்கடை உள்ளிட்ட கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கடைகளில் லைெசன்ஸ் இல்லாமல் கடை நடத்தி வந்த கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு சட்டம் 2006 பிரிவு (31) கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் கடைகளில் அதிக வர்ணம் கலந்த சிக்கன் மற்றும் சிக்கன் 65 இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

மளிகை கடைகளில் காலாவதியான பொரு ட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். வணிக கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வை யாளர் பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சாலையோரங்களில் போண்டா, பஜ்ஜி விற்கும் கடைகளில் உணவுப் பொருட்களை கண்ணாடி பாக்ஸில் வைத்து விற்பனை செய்யவும், உணவுப் பொருட்களை சில்வர் கப், இலை போன்றவற்றில் விற்பனை செய்யவும், பேப்பர் மூலம் சூடான உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் கடை உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி உரிமம் பெற வேண்டும் என்றும் உரிமம் பெற்றவர்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

ஜோலார்பேட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் மற்ற கடை உரிமையா ளர்களிடத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

Similar News