உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் பரிகார பூஜை நடந்த காட்சி.

வீர ஆஞ்சநேயர் கோவிலில் குருபெயர்ச்சி பரிகார பூஜை

Published On 2023-04-24 12:22 IST   |   Update On 2023-04-24 12:22:00 IST
  • சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் வி எம் வட்டத்தில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சாமி கோவில் உள்ளது.

பழமை வாய்ந்த கோவிலில் சனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜையும் அபிஷேக அலங்காரமும் நடைபெற்று வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

குருபெயர்ச்சி பரிகார பூஜை விழா ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் ஆலயத்தில் நடைப்பெற்றது.

குரு கலச ஸ்தாபனம், கலச பூஜை குரு மூலமந்திர, காயத்ரி மந்திர ஜப ஹோமம் அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி, தீபாராதனையும் குரு பகவானுக்கு கலச அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பரிகார பூஜை, அர்ச்சனை நடைபெற்றது ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடு களை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சாமி அறக்கட்ட நிர்வாகிகள் எக்ஸெல் ஜி. குமரேசன், கோவை கிளாசிக் அன்பு, ரைஸ் மில் ராஜா, மின் வாரிய அலுவலர் சுரேஷ், சென்னை மகேந்திரன் கவுன்சிலர் இனியன் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News