உள்ளூர் செய்திகள்
ரெயில் மோதி மளிகை கடை வியாபாரி பலி
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 59). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.
இன்று காலை கோவிந்தாபுரம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் இவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த கோவிந்தராஜை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலூருக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது வழியிலேயே கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.