லால் பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் என்ஜின் கோளாறு
- 2 மணி நேரம் தாமதமாக சென்னை நோக்கி சென்றது
- பயணிகள் கடும் அவதி
ஜோலார்பேட்டை:
கர்நாடகா மாநிலம், பெங்களூரில்இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்னை நோக்கி சென்றது.
கர்நாடகா மாநிலம், பெங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை, காட்பாடி, வழியாக தினமும் சென்னை செல்கிறது.
அதன்படி வழக்கம் போல் நேற்று காலை 6மணி அளவில், லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் பெங்களூரில் புறப்பட்டது.
அப்கிபோது கிருஷ்ணராஜபுரத்தில் ரெயில் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 1 மணி நேரம் தாமதமாக குப்பம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.
அங்கிருந்து ஜோலார்பேட்டை செல்ல ரயில் புறப்பட்டு சென்றது. அப்போது சோமநாயக்கன்பட்டி அருகே சென்றபோது மீண்டும் ரெயில் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்ட்டது. இதைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் என்ஜின் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் காலத்தாமதமாக இந்த ரெயில் ேஜாலார்பேட்டையில் வந்து நின்றது. பின்னர் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி சென்றனர். 2 மணி நேரம் காலத்தாமதாக வந்த ரெயிலில் பயணம் செய்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
2 இடங்களல் ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், ஏராளமான பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி, ஜோலார்பேட்டையில் இருந்து பஸ்கள் மூலம் சென்னை சென்றனர். இதனால் அங்கு பரபரப்ப ஏற்பட்டது.