உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்த எடுத்த படம்.

தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்

Published On 2022-10-21 15:41 IST   |   Update On 2022-10-21 15:41:00 IST
  • ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
  • கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு விழா மற்றும் 51 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆர். ரமேஷ் வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், வைகைசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி பேசும்போது எம்.ஜி.ஆ.ரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. இயக்கம் ஆரம்பித்த போது 10 நாட்களில் காணமல் போகும் என சொன்னவர்கள் மத்தியில் இன்று 51-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்து வீரநடை போட்டு கொண்டு இருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதை போல் அ.தி.மு.க. இயக்கம் உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும். தமிழகத்தில் விரைவில் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்பதை இந்த கூட்டத்தின் மூலம் சபதம் ஏற்போம் என்று பேசினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமார், நகர செயலாளர்கள் டி.டி.குமார், எஸ்.பி.சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.மணிகண்டன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சஞ்சீவிகுமார், ஜெய்கிருஷ்ணன் நகர மன்ற உறுப்பினர் ஏழுமலை புள்ளானேரி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News