உள்ளூர் செய்திகள்

யானைகளை கோபபடுத்த வேண்டாம்

Published On 2023-05-15 15:19 IST   |   Update On 2023-05-15 15:19:00 IST
  • பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
  • சமூக வலைத்தளங்களில் ஆடியோ

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம், நாட் றம்பள்ளி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் சுற்றித்திரிந்த 2 யானைகள் 2 நாட்களுக்கு முன் வழி தவறி தமிழக எல்லையான தகரகுப்பம் வனப்பகுதியில் முகாமிட்டது.

இரு யானைகளும் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்தது. பின்னர் நாட்றம் பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்தது.

2 யானைகள் பார்த்த பொதுமக்கள் கத்தி கூச்சல் எழுப்புவதும், யானை அருகே சென்று துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது நிகழ்ந்து கொண்டிருந்தது.

இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று சமூக வலைத்தளங்கள் மூலம் ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது:-

ஆந்திரப் பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகளை விரட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் சேர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளும் செய்து கொண்டி ருக்கிறோம் .

பொதுமக்கள் யானை அருகே சென்று விரட்ட முயற்சிப்பது யானை மீது வாட்டர் பாட்டில் வீசுவது டார்ச் லைட் அடிப்பது போன்ற செயல்களால் மிகுந்த ஆக்ரோஷம் அடைந்துள்ளது.

பொதுமக்கள் தாங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் யானைகள் நெடுஞ்சாலை கடந்து காட்டுப்பகுதிகள் செல்ல முயலும் போது தாங்கள் கத்துவதால் மீண்டும் அது ஊருக்குள் திரும்பி விடுகிறது.

அனைவரும் வீட்டிற்குள் இருந்தால் யானை நெடுஞ்சாலையை கடந்து காட்டுப் பகுதியில் சென்று விடும் யாரும் யானை அருகே செல்ல வேண்டாம் யானைகள்ஆக்ரோஷமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Tags:    

Similar News