உள்ளூர் செய்திகள்

மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

Published On 2023-04-30 12:39 IST   |   Update On 2023-04-30 12:39:00 IST
  • குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் கட்ட தேவையான இடம் உள்ளதா என கேட்டறிந்தார்
  • அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த பனந்தோப்பு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் புதியதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் கட்ட தேவையான இடம் உள்ளதா என நில அளவையரிடம் கேட்டறிந்தார்.

நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை வட்டாட்சியர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, தலைமை நில அளவர், குறு வட்ட நில அளவர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News