உள்ளூர் செய்திகள்

வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை பதிவேற்ற வேண்டும்

Published On 2023-06-21 08:53 GMT   |   Update On 2023-06-21 08:53 GMT
  • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
  • ஆய்வின்போது கண்டறியும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலூர்:

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் தகவல்களை சேகரிக்கும் பொருட்டு தொழிலாளர் ஆணையம்அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மற்றும் ராணிப் பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த கடைகள் நிறுவ னங்கள், வணிக நிறுவனங்கள், ஓட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட், கோழி பண்ணைகள், மருத்து வமனைகள், உள்ளாட்சி அமைப்புகள் (மாநக ராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி), பள்ளிகள், கல்லூ ரிகள் மற்றும் முடிதிருத்தும் நிலையங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலா ளர்களின் விவரங்களையும், சுயவேலை செய்பவர்கள், பாதுகாவலராக பணி புரிபவர்கள், வீட்டுவேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களையும், தொழிலாளர்துறையின் வலைதளத்தில் (http://abour.tn.gov.in/ism) நிறுவனங்களின் உரிமையாளர்கள் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஏற்படுத்தி வெளிமாநில தொழி லாளர்களின் ஆதார் எண், செல்போன் எண், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் கள் என்ற முழு விவரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாத நிறுவ னங்களை ஆய்வின்போது கண்டறியும்பட்சத்தில் தொழிலாளர் துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News