உள்ளூர் செய்திகள்

ஏரியில் செத்து மிதந்த மீன்கள்.

பெரிய ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

Published On 2022-09-01 15:32 IST   |   Update On 2022-09-01 15:32:00 IST
  • தண்ணீர் சேகரித்து பரிசோதனை
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்மையப்பன் பெரிய ஏரி சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஆண்டுதோறும் இந்த ஏரி மீன் பிடிப்பதற்காக ஏலம் விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று காலை அம்மையப்பன் பெரிய ஏரியில் சுமார் 200 கிலோ எடையுள்ள மீன்கள் இறந்து தண்ணீரில் மிதந்து கிடந்தது. இதனை கண்டு அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இள வரசன் என்ப வருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவ ரசன் துணை தலைவர் நிர்மலா சஞ்சய் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்து கிடந்த மீன்கள் கண்டு அதிர்ச்சி அடை ந்தனர்.

அதன் பிறகு ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்கூர் ஏரியில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான சுமார் 200 கிலோ எடையுள்ள மீன்கள் மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் நேற்று பெரிய ஏரியில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன்கள் ஏரியில் இறந்த மிதந்தது. மேலும் சில மீன்கள் கரை ஒதுங்கியது இதனால் ஏரியின் தண்ணீர் சேகரித்து அதனை பரிசோதனைக்காக வேலூர் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மர்ம ஆசாமிகள் ஏதாவது நாச வேலையில் ஈடுபட்டார்களா என போலீசார் விசாரணையில் தெரிய வரும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News