உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்
காலை உணவு திட்ட கியாஸ் சிலிண்டர் மளிகை பொருட்கள் திருட்டு
- மர்ம கும்பல் கைவரிசை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் தயார் செய்யும் சமையல் அறை உள்ளது.
இங்கு இருந்து ஒரு கியாஸ் சிலிண்டர் 40 சாப்பாடு தட்டுகள் 50 டம்ளர்கள் மற்றும் அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை மர்ம கும்பல் திருடி சென்றனர்.
இது குறித்து புகாரின் பேரில் உமாராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.