உள்ளூர் செய்திகள்
- சி.சி.டி.வி. காட்சியால் பரபரப்பு
- மர்ம நபர் குறித்து விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த சடலை குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் அருகே உள்ள நகை கடைக்கு பைக்கில் வந்தார்.
நகைக்கடையின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு அடகு வைத்த நகையை மீட்க கடைக்கு உள்ளே சென்றார். பின்னர் வெளியே வந்து பார்த்தார். அப்போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடையினுள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஒருவர் பைக்கை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.