உள்ளூர் செய்திகள்

குழந்தை கடத்தல் குறித்து விழிப்புணர்வு

Published On 2022-08-05 09:51 GMT   |   Update On 2022-08-05 09:51 GMT
  • உறுதி மொழி ஏற்பு
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை வளாகத்தில் மனித கடத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் திருநாவுக்கரசு, ஜெய் கமல் தலைமை தாங்கினார்.

ஜோலார்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், ரெயில்வே காவல் நிலைய முதுநிலை காவலர் பெல்ஜியா, கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அதில் இருந்து எளிதில் விடுபடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது ரெயில்வே போலீஸ் நிலைய போலீசார், ெரயில்வே பாதுகாப்பு படையினர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், ஆட்டோ டிரைவர்கள், ரயில்வே துப்புரவு பணி யாளர்கள், விற்ப னையாளர்கள், ெரயில்வே மருத்துவ ஊழியர்கள் மற்றும் இதர ரெயில்வே பணியா ளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ரெயில்வே பிளாட்பாரங்களில் கலை நிகழ்ச்சி மூலம் 50க்கும் மேற்பட்டோர் கைகளில் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தி குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியாக வந்தனர். இறுதியில் மனித மற்றும் குழந்தை கடத்தல் எதிர்ப்புக்கு அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

Tags:    

Similar News