உள்ளூர் செய்திகள்
- தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி காளியப்ப நகரைச் சேர்ந்தவர் சக்திவேல்(27). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயசூர்யா (22). இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில், தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், விரக்தியடைந்த ஜெயசூர்யா தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பணி முடிந்து வீடு திரும்பிய சக்திவேல், மனைவி மற்றும் மகன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீஸ் நிலையத்தில் நேற்று சக்திவேல் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.