உள்ளூர் செய்திகள்

சவக்குழியில் மனைவி பிணத்தின் மீது அமர்ந்து வாலிபர் பூஜை செய்த காட்சி.

சவக்குழியில் மனைவி பிணத்தின் மீது அமர்ந்து நிர்வாண பூைஜ நடத்திய வாலிபர்

Published On 2022-11-25 09:48 GMT   |   Update On 2022-11-25 09:48 GMT
  • மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி சாவு
  • சப்-கலெக்டர் விசாரணை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த சின்ன பசலிகுட்டையைச் சேர்ந்தவர் ராஜாதேசிங்கு. இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு பூர்ணிமா (25) என் பவருடன் திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக பூர்ணிமா இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டு கொட்ட கையை வாட்டர் சர்வீஸ் செய்யும் போது

கொட்ட கையின் மேற்கூரையில் இருந்து எதிர்பாராத வித மாக கருவியில் இருந்து மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் பூர்ணிமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்து பூர்ணிமாவின் சடலம் வீட்டுக்கு கொண்டு வரப் பட்டது. பின்னர், உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்ய உறவினர்கள் முற்பட்டனர்.

அப்போது சவக்குழியில் அவருடைய கணவர் ராஜ தேசிங்க குழி முழுவதும் உப்பை கொட்டி விட்டு அதில் திடீரென நிர்வாணமாக பூஜை செய்யத் தொடங்கினார்.பூர்ணிமாவின் சடலத்தின் மீதும் தன் மீதும் உப்பை கொட்டிக் கொண்டு அகோரி போல பூஜை செய்தார், பின்பு பிணத்தின் மீது படுத்த நிலையிலும், அமர்ந்த நிலையிலும் பூஜை செய்தார். இறுதி சடங்கில் பங்கேற்க வந்த உறவினர்கள் யாரையும் இறுதி சடங்கு செய்ய கூட அனுமதிக்காமல் நிர்வாணமாக சடலத்தின் மீது படுத்து கொண்டு அகோரிபோல கர்ஜித குரலில் தியானங்களை மேற்கொண்டார்.

தொடர்ந்து 3 மணி நேரம்சடலத்தின் மீது தியானம் செய்தார்

பின்னர் தன் மனைவி சடலத்தின் முகத்தை யாரும் பார்க்க கூடாது என்று கூறியபடி அனைவரையும் அங்கிருந்து வெளியே கலைந்து போக செய்தார். அதன் பின்னர் அவரே எழுந்து மண்வெட்டியால் மனைவியின் சடலத்தின் மீது மண்ணை போட்டு குழியை மூடினார்.

இந்த சம்பவம் அப் பகுதி மக்களிடையே பரப் ரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாதேசிங்கு சாமியார் போல் மாறியதாகவும் அவர் சிவ பக்தர் எனவும் மனைவி யின் உடலை புதைக்கும் குழியில் இறங்கி அகோரி போல பூஜை செய்ததால் தாங்கள் பயந்து விட்ட தாகவும் தெரிவித்தனர்.

ராஜா தேசிங்கு பூர்ணிமாவுடன் திருமணம் ஆகி 4 ஆண்டே ஆவதால் மின்சாரம் தாக்கி இறந்த வழக்கு சப்-கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Tags:    

Similar News