உள்ளூர் செய்திகள்

வாலிபரை காதல் திருமணம் செய்த இளம்பெண்

Published On 2023-05-28 12:57 IST   |   Update On 2023-05-28 12:57:00 IST
  • நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் நடந்தது
  • பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த புள்ளாநேரியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 24). இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

புதுப்பேட்டை அக்ராகரத்தை சேர்ந்தவர் சுவேதா (20). இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.

இதனால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 25-ந் தேதி சுவேதாவும், தட்சிணாமூர்த்தியும் வீட்டை விட்டு வெளியேறினர்.

நேற்று காலை அக்ராகரம் பகுதியில் உள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதன் பிறகு காதல் கணவருடன் இளம்பெண்ணை போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News