உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்.

கோவிலுக்கு சொந்தமான காளை மாடு சாவு

Published On 2022-09-20 15:04 IST   |   Update On 2022-09-20 15:04:00 IST
  • கண்ணீர் மல்க இறுதி சடங்கு
  • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் பகுதியில் அமைந்துள்ள சென்றாய சாமி பெருமாள் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் காளை மாடு ஒன்றை கடந்த 15 வருடங்களாக வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக காளை மாடு உடல் நலம் சரியில்லாமல் நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தது.

இதனால் ஊர் கவுண்டர் தர்மகர்த்தா ஊர் நாட்டாண்மை மற்றும் பொது மக்கள் முன்னிலையில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் காளை மாட்டிற்கு இறுதி சடங்குகள் செய்து பொது மக்கள் கண்ணீர் மல்க புதைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News