வேலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த 55 ரேஷன் கடைகள் திருப்பத்தூரில் சேர்ப்பு
- கூட்டுறவுத்துறையின் கீழ் 551 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 551 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இதில் 55 கடைகள் வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது.
இதனால் ஆய்வு, தணிக்கை, கண்காணிப்பு பணிகளை துரித , மாகமேற்கொள்ளவும், அரசின் நலதிட்டங்களான பொங்கல் பரிசு தொகுப்பு, நிவாரண பொருட்கள், இலவச வேட்டி, சேலை வினியோகம் ஆகிய பணிகளை சிறப்பாக மேற் கொள்ள ஏதுவாகவும், நிர்வாக வசதிக்காகவும், வேலூர் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலையின் (கற்பகம்) நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்படும் 55 ரேஷன் கடைகள் திருப்பத்தூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் நேற்று முதல் செயல்படும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித் துள்ளார்.