உள்ளூர் செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.
விவசாயி வீட்டில் 4½ பவுன் நகை கொள்ளை
- வீட்டின் பூட்டை உடைத்து கும்பல் துணிகரம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மகாவீரன், விவசாயி. இவரும் இவரது மனைவி ராஜலட்சு மியும் விவசாய நிலத்தில் விவசாய வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை இருவரும் வழக்கம் போல தங்களுடைய நிலத்திற்கு சென்றனர். பின்னர் 12 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மர்மநபர்கள் வீட்டின் முன் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 4 ½ பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து மகாவீரன் பொன்னூர் போலீசில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.