உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூரில் 4 வழி நெடுஞ்சாலையில் ரூ 50 லட்சத்தில் அமைக்கப்பட்ட மின்விளக்குகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, தேவராஜ் தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் ஆவின் சேர்மன் எஸ். ராஜேந்திரன் உள்ளார்.

4 வழிச்சாலையில் ரூ.50 லட்சத்தில் மின்விளக்குகள்

Published On 2023-04-02 09:04 GMT   |   Update On 2023-04-02 09:04 GMT
  • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருப்பத்தூர்:

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை ரூ300, கோடியில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டு உள்ளது. திருப்பத்தூர் டவுன் பகுதியில் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் மின்விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

இதனை ஒட்டி திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டை சாலை வரை இருபுறமும் மின்விளக்குகள் அமைக்க ரூ.50 லட்சம் திருவண்ணாமலை தொகுதி சிஎன்.அண்ணாதுரை எம்பி நிதி ஒதுக்கி இருந்தார்.

அதன்படி இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. இந்த மின் விளக்குகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முரளி வரவேற்றார்.

நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட மின்விளக்குகளை திருவண்ணாமலை தொகுதி சி. என். அண்ணாதுரை எம்பி, எம் எல் ஏக்கள் க. தேவராஜ், ஏ.நல்லதம்பி தொடங்கி வைத்து பேசினார்கள்.

நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் டி ஆர் ரகுநாதன் கே பி ஆர். ஜோதிராஜன், பி சந்திரசேகர், வி., வடிவேல்துணைத்தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா, நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

அதைதொடர்ந்து செய்தியாளர்கள் சி.என்.அண்ணாதுரை எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-

முதற்கட்டமாக திருப்பத்தூர் டவுன் பகுதியில் 300, மீட்டர் ரூ.50 லட்சத்தில்இரு புறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்துரூ4கோடியில் திருப்பத்தூர் நகராட்சி எல்லையில் இருந்து சேலம் எல்லை வரை இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது என்றார்.

Tags:    

Similar News