உள்ளூர் செய்திகள்

மாணவியை காதலிக்க வற்புறுத்திய 2 வாலிபர்கள் கைது

Published On 2022-07-02 14:19 IST   |   Update On 2022-07-02 14:23:00 IST
  • ஆபாச வார்த்தைகளால் பேசி உள்ளனர்.
  • படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சல் ஏற்படுத்தினர்

ஜோலார்பேட்டை, ஜூலை.2-

நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த 14 வயதுஉடைய சிறுமி அதே பகுதியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமியின் பாட்டி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் என்னுடைய பேத்தி கடந்த சில தினங்களாக பள்ளிக்கு வீட்டில் இருந்து செல்லும் போதும் திரும்பி வரும் போதும் அவ்வழியாக 2 வாலிபர்கள் அந்த மாணவியை காதலக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர். பின்னர் ஆபாச வார்த்தைகளால் பேசி உள்ளனர்.

இதனால் என் பேத்தி படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர். புகாரிப் பேரில் நட்டறம் பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து புதுப்பேட்டை சேர்ந்தவர்கள் சின்னராசு (வயது 22) மற்றும் கந்தவேல் (வயது 19) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News