உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்ற காட்சி.

பாண்டுரங்கர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக் குட ஊர்வலம்

Published On 2022-06-16 14:37 IST   |   Update On 2022-06-16 14:37:00 IST
பாண்டுரங்கர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக் குட ஊர்வலம் நடந்தது.

குமாரபாளையம்:

குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விடோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சம்புரோஷனம் விழாவையொட்டி காவிரி ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. யானை மீது தீர்த்தக்குடம் ஏந்தியவாறு பக்தர் வர, மேளங்கள் முழங்க ஏராளமான பெண்கள் தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். நேற்று மாலை, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

Tags:    

Similar News