உள்ளூர் செய்திகள்
கைதான ராஜா
2-வது முறையாக குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
- ரூ.700-ஐ பறிப்பு
- தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது
சேலம்:
சேலம் குகை அருணாசலம் தெருவை சேர்ந்தவர் குமார். இவர், கடந்த மாதம் 19-ந் தேதி மளிகை கடை அருகே நடந்து சென்றார்.அவரை அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.700-ஐ பறித்து சென்றார்.
இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகும் ராஜா தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த ராஜா, தொடர்ந்து வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் அவர் 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.