விழாவில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கலந்து கொண்டு பேசிய காட்சி.
தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் கல்வியாண்டு தொடக்க விழா
- விழாவிற்கு கல்லூரி செயலர் எட்வின் ஜார்ஜ் தலைமை வகித்தார்.
- கல்வியை மாணவர்கள் ஒழுக்கத்துடன் கற்பதோடு, சமூகத்திற்கு நல்ல பயனுள்ள சேவைகளை ஆற்றிட வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரி யில் 2022-2023 ஆம் கல்வியாண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி செயலர் எட்வின் ஜார்ஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கலந்து கொண்டு பேசியதாவது, மாணவ, மாணவிகள் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விளங்குவது கல்வி. அந்த கல்வியை மாணவர்கள் ஒழுக்கத்துடன் கற்பதோடு, சமூகத்திற்கு நல்ல பயனுள்ள சேவைகளை ஆற்றிட வேண்டும் என்று பேசினார்.
இதில் கல்லூரி பொருளாளர் ஜான், சமூகப்பணித்துறை பேராசிரியர் ஆண்டனி கிஷோர், பேராசியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் கல்லூரி துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா நன்றி கூறினார்.