சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
மத்தூர் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
- குடிநீர் கிடைக்காமல் பல நாட்கள் தவித்து வந்தனர்.
- பல முறை புகாகுடிநீர் கிடைக்காமல் பல நாட்கள் தவித்து வந்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், கண்ணன் டஹள்ளி, ஊராட்சி கண்ணட ஹள்ளி கூட்டுச் சாலை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு நீண்ட நாட்களாக குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் பல முறை ஊராட்சி நிர்வாகத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்றுகாலை பெண்கள் காலி குடங்களுடன் திருவண்ணாமலை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போத குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.
இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.