உள்ளூர் செய்திகள்

கடலூர் மஞ்சக்குப்பம் புத்துமாரியம்மன் கோவிலில் நாளை திருவிளக்கு பூஜை

Published On 2023-08-13 07:19 GMT   |   Update On 2023-08-13 07:19 GMT
  • பகல் 2 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும், சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு செடல் பெருவிழாவும் நடந்தது.
  • வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பாவாடை ராயனுக்கு படையல் பூைஜயும் நடைபெறுகிறது.

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று (12-ந் தேதி) விநாயகர் பூைஜயுடன் தொடங்கியது. இன்று காலை 6 மணிக்கு புத்துமாரியம்மனுக்கு புனிதநீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், பகல் 2 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும், சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு செடல் பெருவிழாவும் நடந்தது. அதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (14-ந் தேதி) மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பாவாடை ராயனுக்கு படையல் பூைஜயும் நடைபெறுகிறது.

Tags:    

Similar News