உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம்.

ஓசூர் காமாட்சி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2023-03-19 10:01 GMT   |   Update On 2023-03-19 10:01 GMT
  • இந்த ஆண்டு, வருஷாபிஷேக விழா வருகிற 27- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
  • குத்து விளக்குகளுக்கு அலங்காரங்கள் செய்து தீபம் ஏற்றி கணபதி பூஜையுடன் திருவிளக்கு பூஜையை தொடங்கினர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வருஷாபிஷேக உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல், இந்த ஆண்டு, வருஷாபிஷேக விழா வருகிற 27- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, முன்னதாக நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 350 சுமங்கலி பெண்கள், தாங்கள் கொண்டு வந்த குத்து விளக்குகளுக்கு அலங்காரங்கள் செய்து தீபம் ஏற்றி கணபதி பூஜையுடன் திருவிளக்கு பூஜையை தொடங்கினர்.

வேத விற்பனர்கள் மந்திரங்களை உச்சரிக்க அதனைத்தொடர்ந்து சுமங்கலிகள் மந்திரங்களை உச்சரித்தவாறு குங்குமம், மஞ்சள், மலர்கள், அக்ஷதை ஆகியவற்றை கொண்டு திருவிளக்கிற்கு அர்ச்சனை செய்தனர்.

இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடைபெற்று பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News