உள்ளூர் செய்திகள்

தென்கழனி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்த போது எடுத்த படம்.

ரூ.45 லட்சத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, சிமெண்டு சாலை

Published On 2023-08-18 09:58 GMT   |   Update On 2023-08-18 09:58 GMT
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
  • மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது

செய்யாறு:

வெம்பாக்கம் ஒன்றியம், தென் கழனி கிராமத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிணறு, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, சிமெண்ட் சாலை ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் சேர்மன் மாமண்டூர் ராஜி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அனக்காவூர் சேர்மன் திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் ஒ. ஜோதி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுமுடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தினகரன், ஜெ.சி.கே.சீனிவாசன், ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி விளையாட்டு போட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

Tags:    

Similar News