உள்ளூர் செய்திகள்

மயங்கி விழுந்த பெண்ணை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டு

Published On 2023-06-13 10:02 GMT   |   Update On 2023-06-13 10:02 GMT
  • மும்பையை சேர்ந்தவர்
  • முதலுதவி சிகிச்சை அளித்தார்

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நேற்று பிற்பகல் மும்பை ரயிலுக்காக 1-வது பிளாட்பாரத்தில் பெண் ஒருவர் தனது சகோதரி களுடன் காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் வந்து கீழே விழுந்தார்.

இதனை பார்த்த சக பயணிகள் மற்றும் சகோதரிகள் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மணி மற்றும் வின்சென்ட் ஆகியோர் விரைந்து வந்தனர்.

மயங்கி விழுந்த பெண்ணின் நெஞ்சை அழுத்தியும், உறவினரை வாயில் ஊத சொல்லியும் முதலுதவி செய்தனர். அவரை அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அரக் கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரித்த போது, மயங்கி விழுந்த பெண் மும்பையை சேர்ந்த மாலா (45) என்பது தெரியவந்தது.

இவர் 2 சகோதரிகளுடன் அரக்கோணத்தில் இருக்கும் தனது அண்ணன் கோபால் என்பவரது வீட்டுக்கு வந்ததாகவும், மீண்டும் மும்பை செல்வதற்காக சகோதரரிகளுடன் ரெயில் நிலையம் வந்த போது இச்சம்பவம் நடந்தது என்றும் தெரியவந்தது.

Tags:    

Similar News