உள்ளூர் செய்திகள்

அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த காட்சி.

அங்காளம்மன் கோவிலில் பிள்ளையார் நவக்கிரக சிலைகளுக்கு புனித நீர் அபிஷேகம்

Published On 2023-07-07 15:23 IST   |   Update On 2023-07-07 15:23:00 IST
  • அன்னதானம் வழங்கப்பட்டது
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் புதிய சாலை அங்காளம்மன் கோவிலில் பிள்ளையார் கோவில் மற்றும் நவக்கிரக சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட புதிய விநாயகர் சிலை மற்றும் நவக்கிரக சிலைகள் மீது புனிதநீர் புறப்பாடுடன், பிள்ளையார், நவக்கிரக சிலைகளுக்கு புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சார்பில் பர்வதராஜகுல மரபினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News