உள்ளூர் செய்திகள்
தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோவிலில் தங்க தேரோட்டம்
- பக்தர்கள் நாம சங்கீதம் பாடி வழிப்பட்டனர்
- சொர்ண அலங்காரத்தில் அமர்ந்த கோலத்தில் கோவில் வளாகத்தில் பவனி வந்தனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் ஸ்ரீ ரகுமாயி தாயார் சமேத ஸ்ரீ பாண்டுரங்கன் கோவில் அமைந்துள்ளது. முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது. ஆஷாட ஏகாதேசியில் பக்தர்கள் நாம சங்கீதம் பாடி பாண்டுரங்கனை வழிப்பட்டனர்.
முன்னதாக ரகுமாயி தாயாருக்கும் பாண்டு ரங்கருக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்த பின்பு அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் பாண்டுரங்க சுவாமி தாயாருடன் சொர்ண அலங்காரத்தில் அமர்ந்த கோலத்தில் கோவில் வளாகத்தில் தங்க தேரோட்டம் பவனி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழந்து சென்றனர்.