உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்
திருவண்ணாமலை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்
- டிரைவர் போக்சோவில் கைது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நல்லான்பிள்ளை பெற்றான் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 23), டிரைவர். இவருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
பின்னர் தினகரன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தினகரனை கைது செய்தனர்.