- மான்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு?
- நகராட்சி ஊழியர்கள் அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது.
கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு நேர்திக்க டனுக்காக அன்னதானம் வழங்க ஆன்லைன் மூலம் பொதுமக்கள் விண்ணப்பித்திருந்தனர். கோவில் நிர்வாகம் கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்குவதற்காக அனுமதி அளித்திருந்தனர்.
அருணாசலேஸ்வரரை தரிசிப்பதற்காகவும், பரணி மற்றும் மகா தீபத்தை காண்பதற்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
இந்த நிலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது அவர்களுக்கு அனுமதித்த 101 இடங்களில் அன்ன தானங்கள் வழங்கப்பட்டது. மேலும் சிலர் அனுமதி வழங்கப்படாத இடத்திலும் அன்னதானங்களை வழங்கி யதாக கூறப்ப டுகிறது.
பக்தர்க ளுக்கு வழங்கிய அன்ன தானத்தை பேப்பர் கப் மற்றும் பாக்கு தட்டு போன்ற வைகள் மூலம் வழங்கினர். இதனை வாங்கி சாப்பிட்ட பக்தர்கள் பேப்பர் கப்பு களையும், பாக்கு தட்டுகளையும் ஆங்காங்கே வீசி சென்றனர். இதனால் கிரிவல பாதை முழுவதும் குப்பையாக கிடந்தது.
நகராட்சி ஊழியர்கள் கிரிவலப் பாதையில் ஆங்காங்கே தூக்கி வீசி எறிந்த பேப்பர் கப்புகள் மற்றும் பாக்கு தட்டுகளை அப்புற படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கிரிவலப் பாதையில் மான்கள் சுற்றி திரிகின்றன. தூக்கி எரியும் பேப்பர் கப்புகளை மான்கள் சாப்பிடுவதால் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி னர். இதுபோன்ற செயல்களில் பக்தர்கள் ஈடுபடக்கூடாது என்றும், அன்னதானம் சாப்பிட்ட பின் குப்பை தொட்டியில் போட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.