உள்ளூர் செய்திகள்

சந்தவாசல் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட 3 வீடுகள் இடிப்பு

Published On 2023-06-29 14:15 IST   |   Update On 2023-06-29 14:15:00 IST
  • ஓடைப்புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டு இருந்தது
  • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

கண்ணமங்கலம்:

சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூர் கோலக்காரன்பேட்டை பகுதியில் 3 வீடுகள் அனுமதியின்றி ஓடைப்புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டு இருந்தது.

போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, போளூர் தாசில்தார் நரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொக்லைன் எந்திரம் மூலம் 3 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

அப்போது சந்தவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News