உள்ளூர் செய்திகள்

வாய் தவறிய திருமா.... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...!

Published On 2023-09-23 10:26 GMT   |   Update On 2023-09-23 10:26 GMT
  • சந்திரயான்-3 வெற்றி குறித்து பாராளுமன்றத்தில் அனைத்து கட்சியினரும் விண் வெளித்துறை விஞ்ஞானிகளை வானளாவ புகழ்ந்தார்கள்.
  • வீரமுத்துவேல் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி என்றார்.

சந்திரயான்-3 வெற்றி குறித்து பாராளுமன்றத்தில் அனைத்து கட்சியினரும் விண் வெளித்துறை விஞ்ஞானிகளை வானளாவ புகழ்ந்தார்கள்.

திருமாவளவன் எம்.பி. பேசும்போது, "மங்கல்யான்-1 மயில்சாமி அண்ணாத்துரை, மங்கல்யான்-2 வனிதா என்று ஃபுளோவாக தமிழில் அடுக்கினார். அதே பாணியில் வாய் தவறி இப்போது மங்கல்யான்-3 வீரமுத்துவேல். இவர்களெல்லாம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி என்றார்.

சந்திரயானுக்கு பதிலாக மங்கல்யான் என்று சொன்னதை வலைத்தள வாசிகள் விடுவார்களா? வறுத்தெடுக்கிறார்கள்.

Tags:    

Similar News