உள்ளூர் செய்திகள்
- விழா நடந்ததையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
- அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா நடந்ததையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதில் மாரண்டஅள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
பின்னர் அனைவருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சிவன், அங்காளம்மன், வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து பக்தர்கள், ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து. இரவு குதிரை வாகனத்தில் அங்காளம்மன் சாமி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது.