உள்ளூர் செய்திகள்
தனியார் நிறுவனத்தில் இரும்பு கம்பிகள் திருட்டு
- திருடுபோன இரும்பு கம்பிகளின் மதிப்பு சுமார் 2 லட்சமாகும்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
கடலூர்:
சிதம்பரம் அருகேயுள்ள அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றுபவர் ஜான் (வயது 47). இவர் நேற்று பணியில் இருந்த போது அடையாளம் தெரியாத நான்கு பேர் அங்குள்ள கம்பிகளை திருடியுள்ளனர். அப்போது சப்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது, இரும்பு கம்பிகளை மதில் சுவருக்கு வெளியே போட்டுவிட்டு, சுவர் மீது ஏறி தப்பிவிட்டனர்.
இது குறித்து அவர் கட்டுமான நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். திருடுபோன இரும்பு கம்பிகளின் மதிப்பு சுமார் 2 லட்சமாகும். இது குறித்து தனியார் கட்டுமான நிறுவன பாதுகாவலர் ஜான் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.