உள்ளூர் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
- வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது
- பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகை திருட்டு
சேலம்
சேலம் மெய்யனூர் வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புசாமி. இவரது மகன் ஸ்ரீதர் (வயது 34). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு, தனது குடும்பத்தினருடன் தாரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் நேற்று இரவு 8 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ஸ்ரீதர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.