உள்ளூர் செய்திகள்

திருட்டு நடந்த அடகு கடை மற்றும் சாக்கால் மூடப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா.

அடகு கடைகளில் தங்கம்-வெள்ளி நகைகள் திருட்டு

Published On 2022-07-04 08:11 GMT   |   Update On 2022-07-04 08:11 GMT
  • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் உள்ள ரொக்கம் ரூ. 17,000 திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • நள்ளிரவில் 3 பேர் கடைக்கு வந்து சி.சி.டி.வி. காமிராவை சாக்கை போட்டு மூடி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் கடைத்தெருவில் கலையமு தன் என்பவருக்கு சொந்த மான ரதிமீனா நகை அடகு கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணி முடிந்து கலையமுதன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவரது கடைக்கு அருகில் முகமது இக்பால் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை முகமது இக்பால் தனது மளிகை கடையினை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் உள்ள ரொக்கம் 17,000 ரூபாய் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தவர் மீண்டும் வெளியில் வந்து பார்த்து ள்ளார். அப்போது தனது கடைக்கு அருகிலுள்ள அடகு கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்க ப்பட்டு இருப்பதை கண்டு கலையமுதனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கலைய முதன் அடகு கடைக்கு வந்து பார்த்தபோதுதனது கடையிலும் திருட்டுப் போனது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கலைய முதன் கொரடாச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ஜுவல்லரியில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது நள்ளிரவில் 3 பேர் கடைக்கு வந்து சிசிடிவி காமிராவில் சாக்கை போட்டு மூடி திருட்டு சம்பவத்தில் ஈடுப ட்டதுதெரியவ ந்துள்ளது. கொள்ளையர்கள்மூன்று பேரும் அரை நிர்வாண நிலையில் வந்து கொள்ளையடித்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது.மேலும் இது குறித்து கைக் கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்ட போது 450 கிராம் வெள்ளி பொருட்கள், 2 பவுன் மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போய் இருப்பதாக தெரிவித்தார். போலீசார் திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் அடுத்தடுத்த கடைகளில் நடந்துள்ள திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News