உள்ளூர் செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த வாலிபர் மாயம்

Update: 2022-06-27 09:17 GMT
  • விருதுநகர் வாலிபருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
  • சிகிச்சை முடிந்து வெளியே வந்த வாலிபரை காணவில்லை.

நெல்லை:

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள நரிக்குடி வடக்கு காலனியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் வினோத்(வயது 20). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. அதற்காக சிகிச்சை அளிப்பதற்கு அவரது தாத்தா தேவராஜ்(62) என்பவர் சமீபத்தில் வினோத்தை நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை முடித்துக்கொண்டு 2 பேரும் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தனர். அப்போது திடீரென வினோத் மாயமானார். இதுதொடர்பாக தேவராஜ் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News