உள்ளூர் செய்திகள்

சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த வாலிபர்

Published On 2022-09-26 09:56 GMT   |   Update On 2022-09-26 09:56 GMT

அந்தியூர்:

அந்தியூர் அத்தாணி ரோடு பகுதியில் பொரிக் கடை எதிரே கெட்டி விநாயகர் கோவில் பிரிவு உள்ளது. இந்த ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ேராட்டின் குறுக்கே கழிவுநீர் வடிகால் கட்டும் பணி நடந்தது.

அந்த பணி தற்போது நிறைவு பெற்று அந்த 2 பகுதிகளிலும் திட்டுகள் அமைக்கப்பட்டது.

ஆனால் கழிவுநீர் செல்லக்கூடிய சாலை வரை அந்த தடுப்புச் சுவரை கட்ட வேண்டும் இல்லை யென்றால் பேரிகேட் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பக்க வாட்டில் நிலை தடுமாறி அந்த பெரிய கழிவுநீர் கால்வாயில் விழுந்து விட்டார். இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் யாரும் வர வில்லை.

இதனால் அவரை மேலே தூக்கி விடுவதற்கு ஆட்கள் இல்லாமல் சிறிது நேரத்துக்கு பிறகு அவரே மேலே ஏறி சாலையில் சென்றவர்களை அழைத்தார். இதையடுத்து பொதுமக்கள் கழிவு நீர் வடிகாலில் இருந்த இருசக்கர வாகனத்தை மேலே தூக்கினர்.

இதையடுத்து அங்கு இருந்து வீடு திரும்பி னார் என்பது குறிப்பி டத்தக்கது.

எனவே இதனை கருத்தில் கொண்டு மேலும் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க நெடுஞ் சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News