உள்ளூர் செய்திகள்

மூலிகை வனம் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

மூலிகை வனம் அமைக்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-06-22 10:06 GMT   |   Update On 2022-06-22 10:06 GMT
  • தமிழ்நாட்டில் அரசு அலுவலகத்தில் முன்மாதிரியாக மூலிகை தோட்டம் அமைத்த துணை வட்டாட்சியர் வேதையனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டினார்.
  • அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர் வேதையன் தாசில்தார் அலுவலகம் முழுவதும் மூலிகை செடி நாட்டு அதன் பெயர் பலகையும் வைத்து உள்ளார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா அலுவலக வளாகத்தில் 76 வகையான மூலிகை செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது

விழாவில் கோட்டாட்சியர்பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தாசில்தார் வேதையன் வரவேற்றார்.விழாவில் அலுவலக வளாகத்தில் வல்லாரை, கருசலங்கண்ணி சித்தரத்தை, மலைவேம்பு, மின்னல் கீரை, நித்திய கல்யாணிமருதோன்றி உட்பட 76 வகையான மூலிகை செடிகளையும், 10-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நட்டும், மூலிகைகளின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அதிகாரிகள், பொதுமக்களுக்கு மூலிகை கன்றுகளையும் வழங்கினார்

பின்பு 8 பயனாளிகளுக்கு பட்டா மாற்ற நகல், குடும்ப அட்டையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர்கமலா அன்பழகன், ஊராட்சி ஒன்றியஆணையர்கள் ராமலிங்கம், பாஸ்கரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகரமன்றதலைவர் புகழேந்தி, மாநில கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் ராஜேந்திரன் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார்மூ லிகை பண்ணையாளர் புஷ்பவனம்ஹரிகிருஷ்ணன் உட்பட அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.விழா முடிவில்துணை தாசில்தார் ரமேஷ் நன்றி கூறினார்.

வழக்கமாக தாசில்தார் அலுவலகங்களில் பெயரளவிற்கு புங்கை உள்பட ஒரு சில மரங்கள் நடப்படுவது வழக்கம் மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரும்போது சிறு செடிகளை நடுவார்கள் அதன் பிறகு அதையாரும் கண்டுகொள்ளமாட்டர்கள் மீண்டும் அதிகாரிகள் வரும்போது அதே இடத்தில் மீண்டும் மரம் நடும் விழா நடைபெறுவது அனைத்து அலுவலகத்திலும் நடைபெறுவது வழக்கம்

ஆனால் அதற்கு நேர்மாறாக இவ் அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர் வேதையன் தாசில்தார் அலுவலகம் முழுவதும் மூலிகை செடி நாட்டு அதன் பெயர் பலகையும் வைத்து உள்ளார்

இந்த மூலிகை தோட்டத்தை அலுவலகம் வரும் பொதுமக்கள் பார்த்து வியந்து பாராட்டி செல்கின்றனர் தமிழ்நாட்டில் அரசு அலுவலகத்தில் முன்மாதிரியாக மூலிகை தோட்டம் அமைத்த துணை வட்டாட்சியர் வேதையனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டினார்.

மேலும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் மூலிகை செடியின் பயன்பாட்டை அறிந்து அதனை தங்களின் வீடுகளில் வளர்த்து பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு செயல்பட துணை வட்டாட்சியரின் செயலை ஒவ்வொரு அலுவலகத்தில் பின்பற்றினால் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சென்றால்நோயற்ற வாழ்வை நோக்கிச் .தமிழகம்செல்லும் என்பதில் ஆச்சரியமில்லை.

Tags:    

Similar News