உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் திட்டக்குழு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

Published On 2023-06-29 14:22 IST   |   Update On 2023-06-29 14:22:00 IST
  • திட்டக்குழு உறுப்பினருக்கான தோ்தல் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.
  • தலைவா் பொன்தோஸ் தலைமையில் 7 உறுப்பினா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினருக்கான தோ்தல் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் தி.மு.க. சாா்பில் மாவட்ட துணை செயலாளா் ரவிகுமாா், நகர செயலாளா் ஜாா்ஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் முஸ்தபா, குன்னூா் நகர செயலாளா் ராமசாமி, டி.கே.எஸ்.பாபு, ராஜேந்திரன், விசாலாட்சி உள்ளிட்ட 7 போ் போட்டியிட்ட நிலையில் அனைவரும் வெற்றி பெற்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றிய நிலையில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு தலைவா் பொன்தோஸ் தலைமையில் 7 உறுப்பினா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா். இதையடுத்து திட்டக்குழு முதல் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ. கணேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மணிகண்டன், மாவட்ட ஊராட்சி செயலா் முத்துக்கருப்பன், ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன், ஊட்டி நகரமன்றத் தலைவா் வாணீஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News