உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

Published On 2023-07-03 15:33 IST   |   Update On 2023-07-03 15:33:00 IST
  • கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பிவரவில்லை.
  • இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் இனியவள் (வயது19). இவர் தருமபுரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் அண்ணன் இளவரசு அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News